Saturday, January 15, 2011

திருவள்ளுவர் தினம் மற்றும் உழவர் தினம்

ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்,
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்,
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்,
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்,
போராடும் வேலையில்லை யாரோடும் பேதமில்லை,
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்,

ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்,
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்,

மண்ணிலே தங்கம் உண்டு, மணியும் உண்டு, வைரம் உண்டு,
கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு, வேலை உண்டு,
நெஞ்சிலே ஈரம் உண்டு, பாசம் உண்டு, பசுமை உண்டு,
பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு,
தேடாத செல்வம் இங்கு தேறதோ,
தேனாக நாட்டில் என்றும் பாயாதோ,

ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்,
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்,
போராடும் வேலையில்லை யாரோடும் பேதமில்லை,
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்,

பச்சை வண்ண சேலை காட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா,
பருவம் கொண்ட பெண்ணை போலே நாணம் என்ன சொல்லம்மா...,
அண்ணன் தம்பி நால்வர் உண்டு என்ன வேண்டும் கேளம்மா,
அறுவடை காலம் உந்தன் திருமண நாளம்மா, திருமண நாளம்மா...

ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்,
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்,
போராடும் வேலையில்லை யாரோடும் பேதமில்லை,
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்,

கை கட்டி சேவை செய்து கண்கள் கேட்டு உள்ளம் கேட்டு,
பொய் சொல்லி பித்து கொண்டால் அன்னை பூமி கேலி செய்வாள்,
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
ஏர் செய்யும் உழவன் இன்றி போர் செய்யும் வீரன் ஏது?...

போராடும் வேலையில்லை யாரோடும் பேதமில்லை,
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்,
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்,
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்...